இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

படம்: திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்

தினத்தந்தி 21 Nov 2023 3:52 AM GMT (Updated: 21 Nov 2023 4:59 AM GMT)

திருவண்ணாமலை அருணாசல நாயகர் காலை விருஷப வாகனத்தில் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி.

பஞ்சாங்கம்:

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-5 (செவ்வாய்க்கிழமை) .

பிறை: வளர்பிறை

திதி: நவமி நள்ளிரவு 1.12 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம்: சதயம் இரவு 8.38 மணி வரை பிறகு பூரட்டாதி

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை.

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

சிக்கல் சிங்கார வேலர் விடையாற்று. திருவண்ணாமலை அருணாசல நாயகர் காலை விருஷப வாகனத்தில் புறப்பாடு. சுவாமிமலை முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

இன்றைய ராசிபலன்:

மேஷம் : முக்கிய புள்ளிகள் இல்லம் தேடி வருவர். சாமர்த்தியமாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். முன்னேற்றம் கூடும் நாள்.

ரிஷபம் : கண்டும், காணமாலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். பூமி விற்பனையால் லாபம் கிட்டும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள்.

மிதுனம் : வீடு மாற்றம் பற்றிய புதிய சிந்தனை மேலோங்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் கவனம் தேவை. மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள்.

கடகம் : திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை அமையும். உத்தியோகத் தில் பணப்பொறுப்பில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஆதாயத்தைவிட விரயம் கூடும் நாள்.

சிம்மம்: பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள்.

கன்னி: பற்றாக்குறை அகலும் நாள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

துலாம்: பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். வைராக்யத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள்.

விருச்சிகம் : முன்னேற்றம் கூடும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

தனுசு : புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். குடும்ப பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் சொல்லாதிருப்பது நல்லது. வரவு திருப்தி தரும் நாள்.

மகரம்: நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணய பாதிப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றியுண்டு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

கும்பம் : வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் கூடும். மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். மனச்சுமை குறைய மாருதியை வழிபட வேண்டிய நாள்

மீனம்: சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: கடகம்


Next Story