பிளஸ்-2 தேர்வு முடிவு காட்டிய பாடம்!
தமிழக அரசின் கல்வித்துறை எந்தவித முன்னறிப்புமின்றி திடீரென நேற்று முன்தினம் காலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
தமிழக அரசின் கல்வித்துறை எந்தவித முன்னறிப்புமின்றி திடீரென நேற்று முன்தினம் காலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது. திருத்தப்பட்ட பாடத்திட்டம் மற்றும் புதிய வினாக்கள் முறையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு மாணவர்களுக்கு புது அனுபவமாக இருந்தது. அதுபோல, தேர்வு முடிவுகளும் பெரும்பாலான மாணவர்களுக்கு எதிர்பார்த்ததுபோல இல்லை.
கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட பிளஸ்-2 தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து, 3 லட்சத்து 55 ஆயிரத்து 646 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 285 மாணவிகள் உள்பட 7 லட்சத்து 79 ஆயிரத்து 931 மாணாக்கர்கள் எழுதினர். இதில், 3 லட்சத்து 17 ஆயிரத்து 966 மாணவர்களும், 4 லட்சத்து 2 ஆயிரத்து 243 மாணவிகளும் என 7 லட்சத்து 20 ஆயிரத்து 209 பேர் தேர்வாகியுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாகவே பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் சரிந்து கொண்டே வருகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை தமிழக அரசு ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவர்களைவிட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் பிளஸ்-2 படித்திருக்கிறார்கள், தேர்வாகி இருக்கிறார்கள். பெண் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று ஒரு வகையில் மகிழ்ச்சி அடைந்தாலும், மொத்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டேவருவது கவலையளிக்கிறது. 2017-ம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையைவிட இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரு லட்சத்து 13 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது.
அதைவிட மற்றொரு கவலை என்னவென்றால், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின்கீழ் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்களில், குறைந்தது ஆயிரம் மாணவர்கள் 95 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தமிழக கல்வித் திட்டத்தின்கீழ் படித்த மாணவர்களில் 100-க்கும் குறைவான மாணவர்கள்தான் 95 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, முன்னணி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சி.பி.எஸ்.இ. மாணவர்களே அதிக இடங்களை பெறும்நிலை உருவாகியுள்ளது. மாநில கல்வித் திட்டத்தின்கீழ் படித்த மாணவர்கள் கணக்கு, இயற்பியல் பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். இதற்கான காரணங்களை கல்வித்துறை மிகத் தீவிரமாக ஆராய வேண்டியநிலை இருக்கிறது.
பொதுவாக மாணவர்கள் மத்தியில், இயற்பியல் கேள்வித்தாள் கடினமாக இருந்தது என்று கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு முதல் பிளஸ்-2 வகுப்பில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட புதிய பாடத்திட்டம் மிகக் கடினமாக இருப்பதாகவும், அதிக அளவில் இருப்பதாகவும் மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் ஒரு கருத்து நிலவுகிறது. அது தேர்வு முடிவிலும் வெளிப்பட்டுள்ளது.
தேர்ச்சி பட்டியலை பார்த்தால் திருப்பூர் 97.1 சதவீதம் பெற்று முதல் இடத்திலும், ஈரோடு 96.99 சதவீதம் பெற்று 2-வது இடத்திலும், கோயம்புத்தூர் 96.39 சதவீதம் பெற்று 3-வது இடத்திலும் இருக்கின்றன. படித்த மக்கள் அதிகம் உள்ள கன்னியாகுமரிகூட 9-வது இடத்தில்தான் இருக்கிறது. இதேபோல், நெல்லை 10-வது இடத்தில்தான் இருக்கிறது. தலைநகராம் சென்னைகூட 15-வது இடத்தில்தான் இருக்கிறது. மொத்தம் உள்ள 32 கல்வி மாவட்டங்களில், வேலூர் மாவட்டம் 28-வது இடத்திற்கும், நாகப்பட்டினம் 29-வது இடத்திற்கும், கிருஷ்ணகிரி 30-வது இடத்திற்கும், விழுப்புரம் 31-வது இடத்திற்கும், கடலூர் 32-வது இடமான கடைசி இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன.
எனவே, இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவை வைத்து, அரசு, குறிப்பாக பள்ளிக்கூட கல்வித்துறை பல ஆய்வுகளை மேற்கொண்டு தேவையான சீர்திருத்தங்களை இந்த கல்வியாண்டில் இருந்தே கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Related Tags :
Next Story