பில்லர் இரும்பு கம்பிகளின் துருவை அகற்றும் முறை
கட்டுமான பணிகளின்போது எதிர்கால கட்டமைப்புகளை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட ‘டம்மி’ பில்லர்களில் உள்ள டி.எம்.டி கம்பிகள் துருப்பிடித்து இருக்கும்.
கட்டுமான பணிகளின்போது எதிர்கால கட்டமைப்புகளை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட ‘டம்மி’ பில்லர்களில் உள்ள டி.எம்.டி கம்பிகள் துருப்பிடித்து இருக்கும். அந்த நிலையில் துருவை அகற்ற கீழ்க்கண்ட வழி முறைகளை கடைப்பிடிக்கலாம்.
* கம்பிகளின் மீது ‘ரஸ்ட் கிளீனர்’ ரசாயனத்தை பூசி, சுமார் 3 மணி நேரம் உலரச்செய்ய வேண்டும்.
* அதன் பின்னர், தக்க ‘வயர் பிரஷ்’ (இரும்பு பிரஷ்) கொண்டு கம்பிகளின் துருவை அகற்றி விட்டு, தண்ணீர் மூலம் சுத்தம் செய்து, உலர வைக்க வேண்டும்.
* கம்பிகள் நன்றாக உலர்ந்த பின்னர், 2 மணி நேர இடைவெளியில், 2 முறை என்ற அளவில் துருத்தடுப்பு மேற்பூச்சு (Corrosion Inhibitor) பூசி உலர்ந்த பின்னர், கட்டுமானப் பணிகளை செய்யலாம்.
Related Tags :
Next Story