மழைநீர் வடிகால் குழாய் அமைப்பு

அடுக்குமாடி குடியிருப்புகளில் மேல்மாடியில் மழைநீர் தேங்காமல் உடனடியாக வெளியேறும் வகையில் தளத்தின் வாட்டம் மற்றும் நீர் வெளியேறும் வகையில் தகுந்த அளவு கொண்ட குழாய் போன்ற விஷயங்கள் கச்சிதமாக அமைக்கப்பட வேண்டும்.
மேல்தளத்தில் நீர்க்கசிவு ஏற்படக்கூடாது என்பதற்காக அதன் பணிகளில் டி.எம்.டி கம்பிகள் தேர்வு, தரமான கான்கிரீட் கலவை, சரியாக நீராற்றல் செய்வது, தள ஓடுகள் பதிப்பது போன்ற பணிகள் முறையாக செய்யப்படுகின்றன. இருப்பினும், பல கட்டிடங்களின் மேல்தளங்களில் ஒருசில ஆண்டுகளில் நீர்க்கசிவு ஏற்பட்டு விடுகிறது.
அதன் காரணம் மழைநீர், உடனடியாக வெளியேறாமல் தேங்கி நிற்பதுதான். நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்படும் குழாயின் குறுக்கு விட்டம் 100 மி.மீ அதாவது கிட்டத்தட்ட 4 அங்குலம் இருப்பது அவசியம். அதற்கும் குறைவான அளவில் பொருத்தப்பட்ட குழாயாக இருந்தால், குப்பைகள் அடைத்துக்கொண்டு, தண்ணீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்படும். அதனால், மேல்தளத்தில் தண்ணீர் படிப்படியாக இறங்குவதால், காலப்போக்கில் கட்டிடத்தின் உறுதி பாதிக்கப்படும். அதனால், குழாய் அமைப்பில் கவனம் வேண்டும்.
Related Tags :
Next Story