குற்றாலம், செங்கோட்டையில் முதல்–அமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி
குற்றாலம், செங்கோட்டையில் முதல்–அமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி நடைபெறுகிறது.
நெல்லை,
குற்றாலம், செங்கோட்டையில் முதல்–அமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி நடைபெறுகிறது என்று தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் (பொறுப்பு) ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
தேதி, இடம் மாற்றம்
தமிழக அரசு சார்பில் 2019–20ம் ஆண்டுக்கான முதல்–அமைச்சர் கோப்பைக்கான தென்காசி மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெறுகிறது. இதில் ஆண்களுக்கான போட்டிகள் 27–ந்தேதி (வியாழக்கிழமை) ஒரு பள்ளியிலும், பெண்களுக்கான போட்டிகள் 28–ந்தேதி ஒரு கல்லூரியிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நிர்வாக காரணத்தால் முன்னதாக 22–ந்தேதி (சனிக்கிழமை) பெண்களுக்கான போட்டி குற்றாலம் பராசக்தி கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. ஆண்களுக்கான போட்டி 23–ந்தேதி செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
முன்பதிவு
போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கும். போட்டியில் கலந்து கொள்வதற்கு www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வருகிற 21–ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்கள் கடந்த டிசம்பர் மாதத்துடன் 25 வயது பூர்த்தி அடையாதவர்களாக இருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story