2023 ஆசிய கோப்பை : இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் மோதல்..!
2023 ஆசியக் கோப்பைப் போட்டி குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன
புதுடெல்லி,
2023 ஆசியக் கோப்பைப் போட்டி குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.இதற்கான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா வெளியிட்டுள்ளார்.
இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசியக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த வருடம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இதனால் 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறவுள்ளது. 6 அணிகள் கலந்துகொள்ளும் போட்டியில் இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் உள்ளன. எனவே, இரு அணிகளும் ஆசிய கோப்பை தொடரில் மோதவுள்ளன.
இந்த போட்டித் தொடர் எங்கு நடைபெறும் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை .2023ஆம் ஆண்டில் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டது. அ இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்யாது ஜெய் ஷா கருத்து தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலுக்கு மத்தியில் தான் இந்த அட்டவணையை ஜெய் ஷா இன்று வெளியிட்டுள்ளார்.