2023 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: நடுவர்கள் குழுவை அறிவித்த ஐசிசி...!
2023 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான நடுவர்கள் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது.
துபாய்,
8வது மகளிர் டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10 ம் தேதி தொடங்குகிறது. பிப் 10 அன்று தொடங்கும் இந்த தொடரில் முதல் போட்டியில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்காவும், இலங்கையும் மோதுகின்றன.
இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. இந்திய அணி ஹர்மன்பிரீத கவுர் தலைமையில் பங்கேற்கிறது. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 12ம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான நடுவர்கள் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த தொடரில் 3 ரெப்ரீகள், 10 கள நடுவர்கள் உட்பட 13 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடுவர்கள் குழுவில் இந்தியா சார்பாக 3 பேர் உள்ளனர். ஜிஸ் லெட்சுமி (ரெப்ரீ), விருந்தா ரதி, என் ஜனனி 2 பேரும் நடுவர்கள் ஆகியோர் உள்ளனர்.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2023க்கான நடுவர்கள் விவரம்:-
போட்டி நடுவர்கள்:- ஜி.எஸ். லெட்சுமி (இந்தியா), ஷாண்ட்ரே பிரிட்ஸ் (தென் ஆப்பிரிக்கா), மிட்செல் பெரேரா (இலங்கை).
நடுவர்கள்:- சூ ரெட்ப்பெர்ன் (இங்கிலாந்து), எலோயிஸ் ஷெரிடன் (ஆஸ்திரேலியா), கிளாரி பொலோசாக் (ஆஸ்திரேலியா), ஜாக்குலின் வில்லியம்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), கிம் காட்டன் (நியூசிலாந்து), லாரன் ஏஜென்ஸ்பெர்க் (தென் ஆப்பிரிக்கா), அன்னா ஹாரிஸ் (இங்கிலாந்து), விருந்தா ரதி (இந்தியா), என். ஜனனி (இந்தியா), நிமாலி பெரேரா (இலங்கை).