2-வது ஒருநாள் போட்டி : இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா திரில் வெற்றி


2-வது ஒருநாள் போட்டி : இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா திரில் வெற்றி
x

3 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி பெற்றது

மும்பை,

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனைகளான போப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார். இதனால் ல் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதைத் தொடர்ந்து 259 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியில் யாஸ்திகா பாட்டியா 14 ரன்களும் , சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் பொறுப்பாக விளையாடி 96 ரன்களை குவித்தார். இவருடன் விளையாடிய ரோட்ரிக்ஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி பெற்றது

ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய சதர்லாந்து மூன்று விக்கெட்டுகளையும், ஜார்ஜியா வார்ஹெம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


Next Story