நாளை 2-வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா? மீண்டும் அணிக்கு திரும்பும் ரோகித் சர்மா
முதல் ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் களம் இறங்குவார் என்று தெரிகிறது.
விசாகப்பட்டினம் ,
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் நேற்று மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் களம் இறங்குவார் என்று தெரிகிறது. நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வெல்லுமா என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய போட்டியில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியதிருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு போராடும்.
Related Tags :
Next Story