500-வது சர்வதேச போட்டி: புதிய மைல்கல்லை எட்டும் விராட் கோலி...!
500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் 4-வது இந்திய வீரர் கோலி ஆவார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் கோலிக்கு அது 500-வது சர்வதேச போட்டியாகும். அவர் இதுவரை 110 டெஸ்ட், 274 ஒரு நாள் போட்டி மற்றும் 115 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். 500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் 4-வது இந்திய வீரர் கோலி ஆவார். ஒட்டுமொத்தமாக 10-வது வீரராக உள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் 664 போட்டிகளில் விளையாடி உள்ளார். டோனி 538 போட்டிகளிலும், ராகுல் டிராவிட் 509 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர். கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களில் கோலி 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 500-வது சர்வதேச போட்டியில் விளையாடும் கோலிக்கு இந்நாள், முன்னாள் வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story