'ரோகித் சர்மா பற்றி ஒரு வார்த்தை' ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஆஸி. வீரர்...!


ரோகித் சர்மா பற்றி ஒரு வார்த்தை ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஆஸி. வீரர்...!
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 28 March 2023 3:50 AM GMT (Updated: 28 March 2023 3:52 AM GMT)

ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் நேற்று டுவிட்டரில் அரை மணி நேரம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மெல்போர்ன்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. மேலும் ,ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடர் முடிவடைந்ததும் அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் இடம் பிடித்த ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சாக்னே நேற்று டுவிட்டரில் அரை மணி நேரம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித், கோலி பற்றிய கேள்விகளிக்கு பதில் அளித்தது தற்போது வைரலாகி வருகிறது.

கேள்வி, பதில் நேரத்தில் ரசிகர் ஒருவர் 'ரோஹித் சர்மா பற்றி ஒரு வார்த்தை?' என கேள்வி எழுப்பினார் அதற்கு லபுஸ்சாக்னே,

1 வார்த்தைக்கு மேல், ஆனால் அவர் பேட் செய்வதைப் பார்ப்பது கண்ணுக்கு எளிதானது - மென்மையான பேட் ஸ்விங் என பதில் அளித்தார்.

இதேபோல் மற்றொரு ரசிகர் ஒருவர், பேபுலஸ் 4-ல் (விராட், ரூட், வில்லியம்சன், ஸ்மித்) ஒருவருடன் சேர்ந்து உங்களுக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள் (ஸ்மித் தவிர்த்து) என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த லபுஸ்சாக்னே, விராட் கோலி என பதில் அளித்தார்.






Next Story