ஆசிய கோப்பையில் மாற்று வீரராக இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன் அணியில் இருந்து விடுவிப்பு.!
ஆசிய கோப்பையில் மாற்று வீராராக இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரராக சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தார்.
இந்தியாவின் 17 பேர் கொண்ட அணியில் சாம்சன் மாற்று வீரராக இடம்பெற்றிருந்தார். இதனிடையே, ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளைத் தவறவிட்ட கே.எல். ராகுல், இந்திய அணியில் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார்.
கே.எல்.ராகுல் இந்திய அணியுடன் இணைந்த நிலையில், மாற்று வீராராக இருந்த சாம்சன் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story