ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு


ஆசிய கோப்பை:  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு
x

Image : ICC Tweet 

தினத்தந்தி 3 Sept 2023 2:44 PM IST (Updated: 3 Sept 2023 3:10 PM IST)
t-max-icont-min-icon

டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

லாகூர்,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறுவது யார்? என்பதை கணிப்பது கடினமானதாகும். இவ்விரு அணிகளும் இதுவரை 14 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 8-ல் வங்காளதேசமும், 6-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

வங்காளதேச அணி:

முகமது நைம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், முஷ்பிகுர் ரஹீம், அபிப் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத்

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, நஜிபுல்லா சத்ரான், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ரஷித் கான், பசல்ஹக் பரூக்கி, முஜீப் உர் ரஹ்மான்


Next Story