ஆசிய கோப்பை: திடீரென மும்பை திரும்பிய பும்ரா..!


ஆசிய கோப்பை: திடீரென மும்பை திரும்பிய பும்ரா..!
x

நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதுகின்றன

பல்லகெலெ,

ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பல்லகெலெவில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வேகப்பந்துகவீச்சாளர் பும்ரா விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக பும்ரா மும்பை வந்துள்ளதாகவும் , இதனால் அவர் நாளைய ஆட்டத்தில் விளையாட மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.அவருக்குப் பதிலாக முகமது ஷமி இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற இந்தியா நாளை நேபாளம் அணியை வீழ்த்த வேண்டும்.


Next Story