ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் ,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது.முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகிறது .இந்தியா- பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டம் செப்டம்பர் 2 அன்று இலங்கையின் கண்டியில் நடைபெறும்.
இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி:
பாபர் அசாம் ( கேப்டன்), முகமது ரிஸ்வான், அப்துல்லா சபிக், இமாம் உல் ஹக், உசாமா மிர் ,சவுத் ஷகில், சல்மான் அலி, இப்திகார் அகமது, முகமது நவாஸ், உசாமா மிர், ஹரிஸ் ரவுப், நஷீம் ஷா, ஷாகின் அப்ரிடி., தயாப் தாஹிர், முகமது ஹாரிஸ், பஹிம் அஸ்ரப், முகமது வசீம்.
Related Tags :
Next Story