ஆசிய கோப்பை: மெஹிதி ஹசன் , நஜ்முல் ஹொசைன் அபார சதம் ..! வங்காளதேச அணி 334 ரன்கள் குவிப்பு


ஆசிய கோப்பை: மெஹிதி ஹசன் , நஜ்முல் ஹொசைன் அபார சதம் ..! வங்காளதேச அணி 334  ரன்கள் குவிப்பு
x

தொடர்ந்து 335 ரன்கள் இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது.

லாகூர்,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

லாகூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வரும் 4-வது லீக் ஆட்டத்தில் ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசம் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் வங்காளதேச அணி சிறப்பாக விளையாடியது . அந்த அணியின் மெஹிதி ஹசன், நஜ்முல் ஹொசைன் இருவரும் இணைந்து பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர் . தொடர்ந்து அதிரடி காட்டிய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

இதனால் வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்தது. மெஹிதி ஹசன் 112 ரன்களும் , நஜ்முல் ஹொசைன் 104 ரன்களும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து 335 ரன்கள் இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது.


Next Story