தொடர்ந்து 4 போட்டி கூட விளையாட முடியல... எப்பவும் காயம் தானா ? சி.எஸ்.கே பவுலர் மீது ரவி சாஸ்திரி பாய்ச்சல்
தீபக் சஹாரை இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.
கடந்தஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை காயம் காரணமாக சென்னை வீரர் தீபக் சாஹர் தவறவிட்டார், மேலும் டிசம்பர் 2022 முதல் இந்திய அணிக்காக விளையாடவில்லை. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். மேலும் நடப்பு தொடரில் மேலும் சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்த நிலையில் தீபக் சஹாரை இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது ,
கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக சில பவுலர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியிலேயே குடிபுகுந்தவர்களாக இருக்கின்றனர். விரைவில் அவர்களுக்கு அங்கு எப்போது வேண்டுமானாலும் வரும் போகும் 'ரெசிடண்ட் பெர்மிட்' கிடைத்து விடும். இப்படி காயமடைவதை நம்ப முடியவில்லை. இவர்களை என்.சி.ஏ. விளையாடத் தகுதி உடையவர்கள் என்று சான்றிதழ் கொடுக்கின்றனர், கொடுத்து கொஞ்ச நாட்களிலேயே மீண்டும் காயமடைகின்றனர். 4 போட்டியில் கூட தொடர்ந்து ஆட முடிவதில்லை, காயமடைந்து விடுகின்றனர்.
நீங்கள் யாரும் திரும்பத் திரும்ப காயமடையும் அளவுக்கு அதிக போட்டிகளில் ஆடுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதற்காக என்.சி.ஏ செல்கிறீர்கள்? அங்கிருந்து வந்து 3 போட்டிகளில் ஆடிவிட்டு மீண்டும் அங்கேயே செல்வதற்கா? இது வெறுப்பாக இருக்கின்றது,
என தெரிவித்துள்ளார்.