2 வீரர்களை மட்டும் நம்பி இருக்க முடியாது..! பெங்களூரு அணி குறித்து சேவாக் கருத்து


2 வீரர்களை மட்டும் நம்பி இருக்க முடியாது..! பெங்களூரு அணி குறித்து சேவாக் கருத்து
x

Image Courtesy : AFP 

இரண்டு வீரர்களை மட்டும் நம்பி இருக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 204 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 123 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

பெங்களூரு அணியில் கோலி மற்றும் டு பிளெசிஸ் முறையே 21 மற்றும் 23 ரன்கள் மட்டுமே எடுத்தனர். தங்களது முதல் மும்பை அணியை பெங்களூரு அணி வீழ்த்தியபோது விராட் ,டு பிளசிஸ் இருவரும் அரைசதம் அடித்து தொடக்க விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெற செய்தனர்.

இந்த நிலையில் இரண்டு வீரர்களை மட்டும் நம்பி இருக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்துஅவர் கூறியதாவது ,

இரண்டு வீரர்களை மட்டும் நம்பி இருக்க முடியாது. டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஆர்சிபி வெற்றி பெறும் என்பது போன்று உள்ளது . இது எப்போதும் நடக்காது. கிளென் மேக்ஸ்வெல் பங்களிப்பு செய்ய வேண்டும். தினேஷ் கார்த்திக் , மற்றவர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும்.

இது போன்ற போட்டி ஒவ்வொரு அணிக்கும் நடக்கும். ஒரு பேட்டிங் சரிவு ஒவ்வொருவரு அணிக்கும் நடக்கும், அதுதான் ஐபிஎல் வரலாறு. போட்டியின் ஆரம்பத்தில் பெங்களூரு அணிக்கு இது நடந்தது நல்லது. லீக்கில் 8 முதல் 9 போட்டிகளுக்குப் பிறகு இது நடந்திருந்தால், ரன் ரேட் காரணமாக புள்ளிகள் அட்டவணையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். பின்னர் தகுதி பெறுவதற்கு மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இப்போது அவர்கள் மீண்டும் வருவதற்கு இன்னும் வாய்ப்பு உள்ளது." என தெரிவித்துள்ளார்.


Next Story