5-வது முறையாக "சாம்பியன்" பட்டம் வென்ற சென்னை..! ரோகித் சர்மா வாழ்த்து


5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை..! ரோகித் சர்மா வாழ்த்து
x

அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சென்னை சமன் செய்தது

மும்பை,

'16-வது ஐபிஎல் தொடரின் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.. இதன் மூலம் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது

இந்த நிலையில் சென்னை அணிக்கு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

என்ன ஒரு ஐபிஎல் இந்த வருடம். எத்தனையோ அற்புதமான திறமையான வீரர்களை வெளிக்கொண்டு வந்தது. ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு வாழ்த்துக்கள். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய குஜராத் அணிக்கு பாராட்டு.என தெரிவித்துள்ளார்.


Next Story