கிரிக்கெட் உபகரணங்கள் வாங்க பால் பாக்கெட் விநியோகித்தார் ...நெகிழ வைக்கும் ரோகித் சர்மா பின்னணி..! நினைவு கூர்ந்த முன்னாள் வீரர்


கிரிக்கெட் உபகரணங்கள் வாங்க பால் பாக்கெட் விநியோகித்தார் ...நெகிழ வைக்கும் ரோகித் சர்மா பின்னணி..! நினைவு கூர்ந்த முன்னாள் வீரர்
x
தினத்தந்தி 28 March 2023 10:55 PM IST (Updated: 28 March 2023 11:02 PM IST)
t-max-icont-min-icon

இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா ரோகித் சர்மாவுடன் தனது ஆரம்ப உரையாடல்களில் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார்

முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா ரோகித் சர்மாவுடன் தனது ஆரம்ப உரையாடல்களில் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- 15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய முகாமில் தான் ரோகித்தை முதலில் சந்தித்தேன்.எல்லோரும் அவரை மிகவும் சிறப்பான வீரர் என்று சொன்னார்கள். அங்கு, நான் ரோகித்திற்கு எதிராக விளையாடி அவரது விக்கெட்டை வீழ்த்தினேன். ரோஹித் ஒரு வழக்கமான மும்பை சிறுவனை போன்று, அதிகம் பேசவில்லை, ஆனால் ஆக்ரோஷமாக விளையாடினார். உண்மையில், நாங்கள் ஒருவரையொருவர் அறியாதபோது அவர் ஏன் என்னிடம் இவ்வளவு ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


அவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கிரிக்கெட் உபகரணங்கள் வாங்க பால் பாக்கெட் விற்பனை செய்ததாக எங்களுக்குள் நடந்த விவாதங்களின் போது உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்திருக்கிறார்.அதன் பிறகு எங்கள் நட்பு வளர ஆரம்பித்தது. இப்போது அவரைப் பார்க்கும்போது, எங்கள் பயணம் எப்படி ஆரம்பித்தது, எப்படி வளர்ந்திருக்கிறோம் என்பதை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இவ்வாறு ஓஜா கூறினார்.


Next Story