சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேக 25 ஆயிரம் ரன்கள்..! விராட் கோலி புதிய சாதனை


சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேக 25 ஆயிரம் ரன்கள்..! விராட் கோலி புதிய சாதனை
x

இந்திய அணியை பொறுத்தவரை 25 ஆயிரம் ரன்களை எட்டிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

புதுடெல்லி ,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், இந்திய அணியின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் விராட் கோலி முதல் இன்னின்ஸ்சில் ரன்களும் , 2வது இன்னிங்ஸில் ரன்களும் எடுத்தார் .இதனால் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 25 ஆயிரம் ரன்களை கடந்த 6வது வீரர் என்ற பெருமைய பெற்றார்.

மேலும் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். மேலும், இந்திய அணியை பொறுத்தவரை சச்சினுக்கு பிறகு 25 ஆயிரம் ரன்களை எட்டிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

சர்வதேச அளவில் விராட் கோலி 549 போட்டிகளில் 25 ஆயிரம் ரன்களை எடுத்தார்.

சச்சின் 577 போட்டிகளில் 25 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார். ரிக்கி பாண்டிங் 588 போட்டிகளிலும், ஜாக் கால்லீஸ் 594 போட்டிகளிலும், குமார் சங்கக்காரா 608 போட்டிகளிலும், மகேளா ஜெயவர்தனே 701 போட்டிகளிலும் 25 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர்.



Next Story