நீண்ட காலமாக விளையாடாமல் இருக்கும் பும்ராவை தற்போது மறந்து விடுங்கள்.... இந்திய முன்னாள் வீரர் கருத்து
முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக கடந்த ஆண்டு நடந்த பல்வேறு தொடர்களில் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அந்த தொடரிலிருந்து விலகினார். இந்த நிலையில் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்கும் 16-வது ஐபிஎல் சீசனில் ஜஸ்ப்ரித் பும்ரா பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பும்ரா விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தற்போதைய நிலையில், பும்ராவை மறந்துவிட்டு உமேஷ் யாதவுடன் அணி நிர்வாகம் செல்ல வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மதன் லால் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது ,
அவர்கள் உமேஷ் உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அங்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை, ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே விளையாட முடியும், மீதமுள்ளவர்கள் வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள். ( தற்போது பும்ராவை மறந்து விடுங்கள்.).பும்ரா திரும்பி வரும்போது, பிறகு பார்ப்போம்.
உங்களிடம் இருக்கும் பந்துவீச்சாளரை பயன்படுத்துங்கள்.அவர் எப்போது திரும்புவார் என்று தெரியாது .-ஒருவேளை 1 முதல் 1.5 வருடங்கள். ஆகலாம் . இவ்வளவு காலமாக விளையாடவில்லை.அதன் அர்த்தம் அவரது காயம் தீவிரமானவை.
அதிகபட்சம், காயம் குணமடைய 3 மாதங்கள் ஆகும், செப்டம்பர் முதல் அவர் விளையாடவில்லை - ஹர்திக் பாண்டியாவும் முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு 4 மாதங்களில் திரும்ப முடிந்தது - பும்ரா 6 மாதங்களாக விளையாடவில்லை. எனவே எப்படி எதிர்பார்க்கலாம்? இதுவரை பார்த்த அதே பும்ராவாகத்தான் இருப்பார். அதற்கு அவருக்கு நேரம் தேவைப்படும் . அதே பும்ராவை நீங்கள் பார்க்க விரும்பினால், நீங்கள் அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும்.
என கூறியுள்ளார்