அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம்: டேவிட் வார்னர் கவலை

அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம்: டேவிட் வார்னர் கவலை
x

Image Courtesy : AFP 

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது அற்புதமானது. உங்கள் கிரிக்கெட் திறமையை நன்குப் பரிசோதிக்கக் கூடியது.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் டெஸ்ட் கிரிக்கெட் , குறித்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் பேசியதாவது,

அடுத்த 5-10 வருடங்களில் என்ன நடக்கும், கிரிக்கெட் எந்தப் பாதையில் செல்கிறது என்பதை நினைத்தால் எனக்குக் கொஞ்சம் பயம் ஏற்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருக்கும் வீரர்களை எண்ணி மகிழ்கிறேன். அந்தப் பெருமிதம் தான் உங்கள் வாழ்க்கையின் முக்கியமானதாக இருக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது அற்புதமானது. உங்கள் கிரிக்கெட் திறமையை நன்குப் பரிசோதிக்கக் கூடியது.

உலகெங்கும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் தான் பலருக்கும் ஆர்வம் உள்ளது. ஆனால் உங்கள் பணத்தின் மதிப்பை அறிய வேண்டுமென்றால் உங்களுக்கென்று நற்பெயரை எடுக்கவேண்டும். அதுதான் நல்லது என கூறினார்.

Next Story