உலகக்கோப்பைக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க வேண்டும்: ரவி சாஸ்திரி சொல்கிறார்


உலகக்கோப்பைக்கு பிறகு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க வேண்டும்: ரவி சாஸ்திரி சொல்கிறார்
x

கோப்புப்படம் 

ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்,

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தி உள்ளார்.

வருகிற அக்டோபர் மாதம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்குப் பிறகு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

ரோகித்துக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும் என்றும், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி உள்ளார்.


Next Story