பந்துவீச்சில் ஜொலித்த லக்னோ அணி..! 122 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத்


பந்துவீச்சில் ஜொலித்த லக்னோ அணி..! 122 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத்
x
தினத்தந்தி 7 April 2023 3:37 PM GMT (Updated: 7 April 2023 4:36 PM GMT)

தொடர்ந்து122 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி விளையாடுகிறது.

லக்னோ,

16வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.அதன்படி பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் மயங்க் அகர்வால் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சிறப்பாக விளையாடிய அன்மோல்பிரீத் சிங் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து லக்னோ அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ஹைதராபாத் அணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர் .

அடுத்த வந்த கேப்டன் மார்க்ரம் ரன் எதுவும் எடுக்காமலும் , ஹர்ரி புரூக் 3 ரன்களும்எடுத்துஆட்டமிழந்தார். மறுமுனையில் நிலைத்து ஆடிய ராகுல் திரிபாதி 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 8விக்கெட் இழப்பிற்கு 121ரன்கள் எடுத்தது. லக்னோ சார்பில் குருனால் பாண்டியா 3 விக்கெட்டும் ,அமித் மிஸ்ரா 2 விக்கெட் , ரவி பிஷ்ணோய் , யாஷ் தாகூர் தலா 1 விக்கெட்டும்எடுத்தனர்.

தொடர்ந்து122 ரன்கள் இலக்குடன் லக்னோஅணி விளையாடுகிறது.


Next Story