ஐபிஎல் கோப்பையை நான் இன்னும் வெல்லவில்லை...ஆனால் ? விராட் கோலி உருக்கமான பேச்சு
ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் தீவிரமாக விளையாடுவதால் தான் உலகின் மிகச்சிறந்த ரசிகர்கள் எங்களுக்கு உள்ளார்கள்
மும்பை,
முதலாவது மகளிர் பிரிமீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள பிரா போர்ன், நவி மும்பையில் இருக்கும் டி.ஒய்.பட்டேல் ஆகிய 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது.இதில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன.
ஆனால் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டியிலும் தோல்வியடைந்தது. நேற்று நடைபெற்ற உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்றது ஆர்சிபி அணி. முதலில் பேட்டிங் செய்த உ.பி. அணி, 19.3 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது .பின்னர் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை அடைந்தது.
இந்த ஆட்டத்துக்கு முன்பு பெங்களூரு அணி வீராங்கனைகளை சந்தித்து ஆடவர் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பேசினார் அவர் கூறியதாவது ,
கடந்த 15 வருடங்களாக ஐபிஎல் போட்டியை விளையாடி வருகிறேன்.இன்னும் ஐபிஎல் கோப்பையை நான் வெல்லவில்லை. ஆனாலும் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் போட்டிக்காக ஆர்வமாக இருப்பதை அது தடுத்துவிடாது.
ஐபிஎல் போட்டியை வென்றால் தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என நினைக்க மாட்டேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் தீவிரமாக விளையாடுவதால் தான் உலகின் மிகச்சிறந்த ரசிகர்கள் எங்களுக்கு உள்ளார்கள். ஒவ்வொரு வருடமும் கோப்பையை வெல்வோம் என்கிற உத்தரவாதத்தை நாம் ரசிகர்களுக்குத் தர முடியாது. ஆனால் 110 சதவீதம் உழைப்பைச் செலுத்துவோம் என்கிற உத்தரவாதத்தைத் தர முடியும் என்றார்.
!
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 16, 2023
Virat Kohli's advice to our girls is to believe in themselves and just put in their honest effort every time they take the field, for the remainder of the #WPL! #PlayBold #ನಮ್ಮRCB #SheIsBold #WPL2023 pic.twitter.com/fqgxc48Nup