என்னுடைய ஆட்டத்தை சிறிது மாற்ற விரும்புகிறேன்: ரோகித் சர்மா


என்னுடைய ஆட்டத்தை சிறிது மாற்ற விரும்புகிறேன்: ரோகித் சர்மா
x

இந்த நிலையில் நான் என்னுடைய ஆட்டத்தை சிறிது மாற்ற விரும்புகிறேன் என .இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்

ராய்ப்பூர்,

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி 24ம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 108 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய இந்தியா 20.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்றையப் போட்டியில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார் அவர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில் நான் என்னுடைய ஆட்டத்தை சிறிது மாற்ற விரும்புகிறேன் என .இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் கூறியதாவது ,

நான் என்னுடைய ஆட்டத்தை சிறிது மாற்ற விரும்புகிறேன். நான் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை என எனக்குத் தெரியும். ஆனால், அது குறித்து நான் அதிகமாக கவலைப்படுவதில்லை. என்னுடைய பேட்டிங் குறித்து மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.


Next Story