ஐசிசி டெஸ்ட் தரவரிசை - முதல் 3 இடங்களை பிடித்து ஆஸ்திரேலிய வீரர்கள் சாதனை..!


ஐசிசி டெஸ்ட் தரவரிசை - முதல் 3 இடங்களை பிடித்து  ஆஸ்திரேலிய வீரர்கள் சாதனை..!
x

Image Courtesy : ICC 

இந்தியா சார்பில் ரிஷப் பண்ட் 10வது இடத்தில் உள்ளார்.

துபாய்,

ஐசிசி இன்று வெளியிட்டுள்ள சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் 884 புள்ளிகளுடன் ஹெட் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது . இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்சில் சதம் அடித்து 163ரன்களும் , 2வது இன்னிங்சில் 18ரன்களும் எடுத்தார். முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய அவர் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஸ்மித் 885 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் மாரன்ஸ் லபுசேன் 903 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

மேலும் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அணியைச் சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துளள்ளனர்.

இந்தியா சார்பில் ரிஷப் பண்ட் 10வது இடத்தில் உள்ளார்.


Next Story