உலககோப்பையில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் இந்திய அணியில் இந்த அதிரடி மாற்றம் ஏற்படும் ..! தினேஷ் கார்த்திக் கருத்து


உலககோப்பையில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் இந்திய அணியில் இந்த அதிரடி மாற்றம் ஏற்படும் ..! தினேஷ் கார்த்திக் கருத்து
x
தினத்தந்தி 28 Jan 2023 3:03 PM IST (Updated: 28 Jan 2023 3:16 PM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டு ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர், நவம்பரில் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. 2022ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் தோல்வியடைந்ததில் இருந்து இந்திய அணியில் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக இரு வேறு கேப்டன்சியை நாம் பார்த்து வருகிறோம்.

இந்தியாவின் டி20 அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் பலரும் இல்லாமல் .ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் இளம் இந்திய அணி மட்டுமே விளையாடி வருகிறது. இதனால் இந்திய டி20 , ஒருநாள் , டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணிக்கு வெல்வேறு கேப்டன்கள் நியமிக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 2023 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செய்லபடவில்லை என்றால் இந்திய அணியில் ஸ்பிலிட் கேப்டன்சி முறை (வெவ்வேறு கேப்டன் ) பயப்படுத்தப்படலாம் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ,

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2023 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாகச் செய்லபடவில்லை என்றால்,ஸ்பிலிட் கேப்டன்சி முறையை நாம் காணலாம் அதேசமயம், ரோஹித் ஏதாவது சிறப்பான சாதனையை நிகழ்த்தினால், அனைவரும் வித்தியாசமாக யோசித்து, 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் விளையாடத் தயாராக இருந்தால், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க நாம் விரும்புவோம் என தெரிவித்துள்ளார்.

"தற்போதைக்கு, ஹர்திக் பாண்டியா ஒரு அற்புதமான வேலையைச் செய்கிறார் .மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டிதான் இதற்குக் காரணம். அது ஒரு சிறந்த விளையாட்டு. இலங்கையை 160 ரன்களுக்கு நிறுத்தியது நல்ல முயற்சி. அங்கு தனது கேப்டன்சி திறமையை வெளிப்படுத்தினார். என கூறியுள்ளார்.


Next Story