விராட் கோலிக்காக இந்தியா உலக கோப்பையை வெல்ல வேண்டும் - சேவாக்
இந்த உலக கோப்பையை விராட் கோலிக்காக இந்திய அணி வெல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை,
2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. அதன்படி வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், அட்டவணையை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து கணித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தான் முதல் 4 இடங்களை பிடிக்கும். இந்த உலக கோப்பையை விராட் கோலிக்காக இந்திய அணி வெல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். .
"விராட் கோலியும் இந்த உலகக் கோப்பையை எதிர்பார்க்கிறார் என்று நினைக்கிறேன். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்1 லட்சம் பேர் பேர் உங்களைப் பார்ப்பார்கள். ஆடுகளங்கள் எப்படி செயல்படும் என்பதை விராட் அறிவார். அவர் நிறைய ரன்கள் எடுப்பார், இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வெல்ல,அவர் தன்னால் முடிந்ததைச் செய்வார் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.