இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு அறிவிப்பு..! தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் நியமனம்


இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு அறிவிப்பு..! தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் நியமனம்
x
தினத்தந்தி 7 Jan 2023 5:25 PM IST (Updated: 7 Jan 2023 5:26 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் மோசமாக தோற்று வெளியேறியது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமயிலான தேர்வுக்குழு கலைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதிய தேர்வுக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மேற்கொண்டது.

புதிய தேர்வு குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு நியமிக்கப்பட்டது. அசோக் மல்கோத்ரா, ஜக்னி பரண்ஜோ, சுலக்சனா நாயக் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

இந்த நிலையில் கிரிக்கெட் ஆலோசனை குழு பரிந்துரையின் பேரில் , இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தேர்வு குழுவில் ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரோதோ பானர்ஜி, சலில் அங்கோலா , ஸ்ரீதரன் சரத் ஆகியோயர் இடம்பெற்றுள்ளனர் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது .


Next Story