உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியீடு


உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியீடு
x

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது

புதுடெல்லி,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் சந்திக்கிறது.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனம் இந்திய அணியின் உலகக்கோப்பை ஜெர்சியை வடிவமைத்துள்ளது.


Next Story