டி20 தொடரில் விளையாட இந்திய அணி ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து பயணம்


டி20 தொடரில்  விளையாட இந்திய அணி ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து பயணம்
x

Image Courtesy : PTI 

இந்திய அணியின் அயர்லாந்து பயணத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்தது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் ஜூலை 12-ந் தேதியும், ஒருநாள் போட்டிகள் ஜூலை 27-ந் தேதியும், 20 ஓவர் தொடர் ஆகஸ்டு 3-ந் தேதியும் தொடங்குகிறது. ஆகஸ்டு 13-ந் தேதியுடன் இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முடிவடைகிறது.

அதை தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அயர்லாந்து அணியுடன் இந்தியா மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியின் அயர்லாந்து பயணத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்தது.

ஆகஸ்டு 18-ந் தேதி முதல் 20 ஓவர் போட்டியும், 20-ந் தேதி 2-வது ஆட்டமும் ஆகஸ்டு 23-ந் தேதி 3-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது. அயர்லாந்தில் உள்ள மலாஹிட் நகரில் 3 போட்டிகளும் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.


Next Story