அரை இறுதியில் இந்தியா தோல்வி: ஹர்மன் பிரீத் கவுர் மீது முன்னாள் கேப்டன் கடும் விமர்சனம்


அரை இறுதியில் இந்தியா தோல்வி: ஹர்மன் பிரீத் கவுர் மீது முன்னாள் கேப்டன் கடும் விமர்சனம்
x

ஹர்மன் பிரீத் கவுர் மீது இந்திய பெண்கள் அணி முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி விமர்சித்துள்ளார்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா போராடி தோற்றது. இப்போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் (52 ரன்) ரன்-அவுட் ஆனார். அவரது அவுட் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அவர் 2வது ரன்னை எடுக்க முயற்சித்தபோது மெதுவாக ஓடியதால் ரன்-அவுட் ஆனார் என சர்ச்சை எழுந்தது. ஹர்மன் பிரீத் கவுர் ரன்-அவுட் ஆன விதம் சிறுபிள்ளைத்தனமானது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறினார். ஆனால் அதை ஹர்மன் பிரீத் கவுர் மறுத்தார்.

இந்த நிலையில் ஹர்மன் பிரீத் கவுர் மீது இந்திய பெண்கள் அணி முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி விமர்சித்துள்ளார்

.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஹர்மன் பிரீத் கவுர் தனது பேட், கிரீசுக்கு முன்பாக தடுமாறிவிட்டதாக நினைக்கிறார். ஆனால் அவர் இரண்டாவது ரன்னை எடுக்க முயற்சித்தபோது ஜாக்கிங் செய்தது போல் இருந்தது. உங்கள் விக்கெட் மிகவும் முக்கியமானது என்று தெரிந்தவுடன் நீங்கள் ஏன் நிதானமாக ஓடுகிறீர்கள்? வெற்றிபெற தொழில்முறை கிரிக்கெட் விளையாட வேண்டும்.ஆஸ்திரேலியாவின் பெர்ரி செய்த டைவ்வை பாருங்கள். ஹர்மன் பிரீத் கவுர் 2வது ரன்னின்போது சாதாரணமாக இருந்தார். சவுகரியமாக அடையலாம் என்று நினைத்தார். ஷபாலி வர்மா தன்னை வீழ்த்த முடியாது என்று நினைத்தார். அவர் தவறாக நினைக்கிறார். அவரது ஷாட் தேர்வு மிகவும் மோசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story