ஐபிஎல் 2023 : மும்பை அணியில் இணைந்த ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்...!


ஐபிஎல் 2023 : மும்பை அணியில் இணைந்த ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்...!
x
தினத்தந்தி 6 April 2023 8:29 PM IST (Updated: 6 April 2023 8:30 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ரிலே மெரிடித் ரூ. 1.5 கோடிக்கு மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் ரிலே மெரிடித் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அணியில் இடம் பெற்றிருந்த ஜை ரிச்சர்ட்சன் தொடரில் இருந்து விலகினார்,

இந்த நிலையில் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ரிலே மெரிடித் ரூ. 1.5 கோடிக்கு மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை அணி முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் , 2வது போட்டியில் நாளை மறுநாள் சென்னை அணியுடன் மோதுகிறது.


Related Tags :
Next Story