ஐபிஎல் 2023 : சென்னை அணியுடன் இணைந்த கான்வே,சாண்ட்னர்


ஐபிஎல் 2023 : சென்னை அணியுடன் இணைந்த கான்வே,சாண்ட்னர்
x
தினத்தந்தி 26 March 2023 11:59 AM IST (Updated: 26 March 2023 12:01 PM IST)
t-max-icont-min-icon

இது தொடர்பான புகைப்படத்தை அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சென்னை,

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர்.

சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் சென்னையில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். தோனி, ஜடேஜா, ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி என அனைவரும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அணியுடன் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த டேவான் கான்வே மற்றும் சாண்ட்னர்இணைந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


Related Tags :
Next Story