ஐபிஎல் 2023: பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் நியமனம்...!


ஐபிஎல் 2023: பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் நியமனம்...!
x

ஐபிஎல் 2023 சீசனுக்கான பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான மினி ஏலம் கடந்த மாதம் கொச்சியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.

இந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கர்ரணை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போனவர் என்ற பெருமையை சாம் கரன் பெற்றார். கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மயங்க் அகர்வாலை அந்த அணி நிர்வாகம் விடுவித்தது.

இந்த ஆண்டுக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்திய வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த அணி முக்கிய அற்விப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அந்த அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் சுனில் ஷோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என கூறியுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் முன்பு அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தபோது அவருக்கு உதவியாளராக சுனில் ஜோஷி பணியாற்றினார். 2008, 2009 ஆம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் தொடரின்போது அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்தார்.

தற்போது பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக ட்ரீவர் பேய்லிஸ் உள்ளார். பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாபரும், பந்து வீச்சு பயிற்சியாளராக சாரி லாங்வெல்ட்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த பயிற்சியாளர் குழுவில் சுனில் ஜோஷியும் இணைந்திருக்கிறார்.




Next Story