ஐபிஎல் 2023: பெங்களூரு அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல் ..!


ஐபிஎல் 2023: பெங்களூரு அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல் ..!
x
தினத்தந்தி 15 March 2023 9:32 PM IST (Updated: 15 March 2023 9:47 PM IST)
t-max-icont-min-icon

மாற்று வீரராக நியூசிலாந்து அணியின் மைக்கேல்பிரேஸ்வெல்-ஐ பெங்களூரு அணி நிர்வாகம் தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. 31ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த வருடன் ஐபிஎல் தொடர் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதனால் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதரபாத் உள்ளிட்ட மைதானங்களில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடருக்காக 10 அணிகளும் பயிற்சியை தொடங்கி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூரு அணியில் இருந்து வில் ஜேக்ஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸை ரூ.3,2 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.இந்த நிலையில் காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.

இதனை தொடர்ந்து மாற்று வீரராக ,நியூசிலாந்து அணியின் மைக்கேல்பிரேஸ்வெல்-ஐ பெங்களூரு அணி நிர்வாகம் தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Related Tags :
Next Story