ஐபிஎல் 2023: புதிய ஜெர்சியை வெளியிட்ட கொல்கத்தா..!
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது.
கொல்கத்தா,
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
வரும் 31ம் தேதி நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், டோனி தலமையிலான சென்னை அணியும் மோத உள்ளன. இந்த தொடருக்காக அனைத்து வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தொடருக்கான கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். இதனால் அவர் ஐபிஎல் தொடரில் ஆடுவாரா? இல்லையா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை கொல்கத்தா அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாக பரவி வருகிறது.