ஐபிஎல் 2023: ரீஸ் டாப்லிக்கு பதிலாக பெங்களுரு அணியில் இணைந்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்..!


ஐபிஎல் 2023: ரீஸ் டாப்லிக்கு பதிலாக பெங்களுரு அணியில் இணைந்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்..!
x
தினத்தந்தி 7 April 2023 2:51 PM IST (Updated: 7 April 2023 2:52 PM IST)
t-max-icont-min-icon

தென் ஆப்பிரிக்கா அணியின் வெய்ன் பார்னெல் சேர்க்கப்பட்டுள்ளார்.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரீஸ் டாப்லி விலகியுள்ளார். மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் ரீஸ் டாப்லி காயம் அடைந்தார்.இதில் தோள்பட்டை பகுதியில் டாப்லிக்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து காயத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தால் டாப்லி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.இந்த நிலையில் அவருக்கு பதிலாக பெங்களூரு அணியில் தென் ஆப்பிரிக்கா அணியின் வேகபந்துவீச்சாளர் வெய்ன் பார்னெல் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே காயம் காரணமாக பெங்களூரு அணியிலிருந்து ரஜத் படித்தார் விலகினார். அவருக்கு பதிலாக இந்திய வீரர் வியாசக் விஜய் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story