ஐபிஎல் இறுதிப்போட்டி: தனது 250-வது போட்டியில் களம் காணும் தோனி..!
நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.
ஆமதாபாத்,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது.
சென்னை அணி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அதிக முறை (5 தடவை) கோப்பையை வென்ற மும்பையின் சாதனையை சமன் செய்ய வியூகம் அமைக்கும். அதேநேரத்தில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாகி முதல் முயற்சியிலேயே கோப்பையை வென்று அசத்திய குஜராத் அணி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை தனதாக்கி சாதனை படைக்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த போட்டி சென்னை அணி கேப்டன் தோனிக்கு 250வது போட்டி ஆகும். இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் களமிறங்கும்தோனி ஐபிஎல் வரலாற்றில் 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.
அடுத்த இடத்தில் ஐபிஎல் போட்டிகளில் (243) ரோஹித் சர்மா உள்ளார். அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் (242), விராட் கோலி (237), ரவீந்திர ஜடேஜா (225) ஆகியோர் உள்ளனர்.
My dear Thala, pic.twitter.com/NMo70bi7B6
— Chennai Super Kings (@ChennaiIPL) May 28, 2023