ஐபிஎல்: மாற்று வீரராக கொல்கத்தா அணியில் இணைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்..!
லிட்டன் தாஸுக்கு மாற்று வீரரை கொல்கத்தா அணி அறிவித்துள்ளது.
ஐபிஎல் 16-வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லீக் சுற்று இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனிலிருந்து விலகிய லிட்டன் தாஸுக்கு மாற்று வீரரை கொல்கத்தா அணி அறிவித்துள்ளது. ரூ.50 லட்சத்திற்கு வங்கதேச விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான லிட்டன் தாஸை அணியில் எடுத்தது . . தனது தேசிய அணிக்கான பங்களிப்பை செய்துவிட்டு பாதி சீசனில் வந்து கேகேஆர் அணியுடன் இணைந்த லிட்டன் தாஸ் ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடினார்.
அதன்பின்னர் தனது குடும்பத்தில் மருத்துவ அவசர காரணங்களுக்காக இந்த சீசனிலிருந்து விலகினார். இந்நிலையில், அவருக்கு மாற்று வீரராக வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஜான்சன் சார்லஸை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
Related Tags :
Next Story