தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஜடேஜா ?
காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா விலகினார்.
கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் கடந்த 26ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1 -0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விளையாடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகினார். இந்த நிலையில் தற்போது ஜடேஜா பயிற்சியை தொடங்கி உள்ளதாகவும், 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.