கடைசி ஒருநாள் போட்டி: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் திணறல்


கடைசி ஒருநாள் போட்டி: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் திணறல்
x
தினத்தந்தி 1 Aug 2023 7:32 PM GMT (Updated: 1 Aug 2023 7:36 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

தரோபா

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரைசதம் கடந்தனர். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷேப்பர்டு 2 விக்கெட்டுகளும், ஜோசப், மோய்டி மற்றும் காரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.

இந்திய அணியின் அபார பந்துவீச்சால், அந்த அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பிரண்டன் கிங்(0), மேயர்ஸ்(4), ஷாய் ஹோப்(5), கீசி கார்டி(6), ஹெட்மயர்(4), சைபர்ட்(8) அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.


Next Story