பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ அசத்தல் வெற்றி..!


பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ அசத்தல்  வெற்றி..!
x
தினத்தந்தி 19 April 2023 11:20 PM IST (Updated: 19 April 2023 11:30 PM IST)
t-max-icont-min-icon

இறுதியில் 20ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு 144ரன்கள் எடுத்தது ராஜஸ்தான்.

ஜெய்ப்பூர்,

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

ராகுல் மற்றும் மேயர்ஸ் இருவரும் தொடக்கத்தில் தடுமாறினர். இதில் ராகுல் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை ராஜஸ்தான் வீரர்கள் வீணடித்தனர். இதனால் இந்த இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் 39 ரன்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய ஆயுஷ் பதோனி 1 ரன், தீபக் ஹூடா 2 ரன் எடுத்த நிலையிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மேயர்ஸ் 51 ரன்கள் எடுத்த நிலையிலும் அவுட் ஆகினர். இதையடுத்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தனர்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை 5வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டோய்னிஸ் 21 ரன்னுக்கு அவுட் ஆனார். இறுதியில் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி ஆடியது.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , ஜோஸ் பட்லர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாகி விளையாடினர். ராஜஸ்தான் அணிக்கு நல்ல தொடக்க கொடுத்த இருவரும் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு விரட்டினர்.

அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்த போது ஜெய்ஸ்வால் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 2ரன்களுக்கு ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து பட்லர் 41 ரன்களுக்கு வெளியேறினார்.

அடுத்து வந்த படிக்கல் சிறப்பாக விளையாடினார்.கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது.அவேஷ் கான் அந்த ஓவரை வீசினார். பராக் , படிக்கல் களத்தில் இருந்தனர்.

கடைசி ஓவரில்ராஜஸ்தான் அணி 4ரன்கள் மட்டும் எடுத்தது. ராஜஸ்தான் இறுதியில் 20ஓவர்கள் முடிவில்6 விக்கெட் இழப்பிற்கு 144ரன்கள் எடுத்தது.இதனால் லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.


Related Tags :
Next Story