அதிக முறை டக் அவுட்: ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி கொல்கத்தா வீரர் மோசமான சாதனை


அதிக முறை டக் அவுட்: ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி கொல்கத்தா வீரர் மோசமான சாதனை
x
தினத்தந்தி 7 April 2023 2:21 PM IST (Updated: 7 April 2023 2:21 PM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தா வீரர் மந்தீப் சிங் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.


ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 204 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 123 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் கொல்கத்தா வீரர் மந்தீப் சிங் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களாக இருந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக்கை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை மந்தீப் சிங் பிடித்துள்ளார். 15 முறை மந்தீப் சிங் டக் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா தினேஷ் கார்த்திக் 14 முறையும் பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், பார்தீவ் படேல், ரகானே, அம்பதி ராயுடு ஆகியோர் 13 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர்.


Next Story