இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பாலோவர்ஸ் - ஆசியாவிலேயே முதலிடம் பிடித்த விராட் கோலி..!


இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பாலோவர்ஸ் -  ஆசியாவிலேயே முதலிடம் பிடித்த விராட் கோலி..!
x

ரொனால்டோ மற்றும் மெஸ்சி அடுத்தபடியாக அதிக பின்தொடர்பவர்களை கொண்ட விளையாட்டு வீரர் என்ற இடத்தையும் விராட் கோலி பெற்றுள்ளார்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமூக வலைத்தளங்களில் துடிப்பாக இயங்கி வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தான் செல்லும் இடங்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதனால், இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை கோடிக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 250 மில்லியனாக உள்ளது.

இதன் மூலம், ஆசியாவிலேயே இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்ற முதல் இந்திய பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்சி அடுத்தபடியாக அதிக பின்தொடர்பவர்களை கொண்ட விளையாட்டு வீரர் என்ற இடத்தையும் விராட் கோலி பெற்றுள்ளார்.


Next Story