ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள்..! டி வில்லியர்ஸை முந்திய ரோகித் சர்மா


ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள்..! டி வில்லியர்ஸை முந்திய ரோகித் சர்மா
x
தினத்தந்தி 12 May 2023 8:29 PM IST (Updated: 12 May 2023 8:37 PM IST)
t-max-icont-min-icon

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏபி டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா 2வது இடம் பிடித்துள்ளார்.

மும்பை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த போட்டி தொடரில் இன்னும் எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைக்கவில்லை.

இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 57-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சை சந்திக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரி , 2 சிக்ஸர்கள் அடித்தார்.

இந்த சிக்ஸரால் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஏபி டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா 2வது இடம் பிடித்துள்ளார்.

அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் , கெயில் 141 போட்டியில் 357 சிக்ஸரும் முதல் இடத்திலும் , ரோகித் சர்மா 234 போட்டியில் 252 சிக்சருடன் 2வது இடம் , டி வில்லியர்ஸ் 170 போட்டிகளில் 251 சிக்சரும் அடித்து 3வது இடத்தில் உள்ளார்


Next Story