எனது ரன் அவுட் துரதிருஷ்டவசமானது- இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் வேதனை
கிரிக்கெட் விளையாடினோம். எங்களின் இயல்பான ஆட்டத்தை விளையாட விரும்பினோம்
கேப்டவுன்,
8வது மகளிர் டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி 9 ரன், மந்தனா 2 ரன், அடுத்து வந்த யாஷ்டிகா 4 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெமிமா மற்றும் ஹர்மன்பிரீத் இணை சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். இவர்கள் இருவரும் ஆடிய விதத்தை பார்க்கையில் இந்திய அணி எளிதாக வென்று விடும் என நினைத்து கொண்டிருந்த வேளையில் ஜெமிமா 43 ரன்னில் அவுட் ஆனார். Also Read - ஐபிஎல் 2023: டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்..? - துணை கேப்டன் இவரா...! இதையடுத்து மறுமுனையில் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடிய கேப்டன் ஹர்மன்பிரீத் 52 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தில் 15 வது ஓவரின் 4வது பந்தில் 2வது ரன்னுக்காக ஓடிய போது ரன் அவுட் ஆனார். அவர் அவுட் ஆன உடன் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மங்கியது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களே எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இறுதிபோட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது.
இந்தியா போராடி தோற்று வெளியேறியது. தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் கூறியதாவது:-
இதை விட துரதிருஷ்டவசமாக உணர முடியாது. ரோட்ரிக்ஸ் ஆட்டத்தில் மீண்டும் வேகத்தை பெற்றோம். நான் ரன்-அவுட் ஆன விதம் துரதிருஷ்டவசமானது. இங்கிருந்து தான் தோற்றோம். இதை நாங்கள் எதிர் பார்க்கவில்லை. கடைசி பந்து வரை சென்றதில் மகிழ்ச்சி அடைந்தோம். தொடக்கத்தில் முதல் 2 விக்கெட் இழந்தாலும் எங்களிடம் ஒரு நல்ல பேட்டிங் வரிசை உள்ளது என்று எங்களுக்கு தெரியும்.
ரோட்ரிக்சை பாராட்ட வேண்டும். அவர் எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தார். ஒட்டு மொத்தமாக நாங்கள் சில நல்ல கிரிக்கெட் விளையாடினோம். எங்களின் இயல்பான ஆட்டத்தை விளையாட விரும்பினோம். அதை எங்களில் சிலர் செய்தோம். நாங்கள் மீண்டும் சில எளிதான கேட்சுகளை தவர விட்டோம். வெற்றி பெற வேண்டு மென்றால் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.