உடல் நலம் குணமடைந்து வருவது குறித்து ரிஷப் பண்ட் கொடுத்த புதிய தகவல்


உடல் நலம் குணமடைந்து வருவது குறித்து ரிஷப் பண்ட் கொடுத்த புதிய தகவல்
x

உடல் நலம் குணமடைந்து வருவது குறித்து ரிஷப் பண்ட் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து உத்தரகாண்டுக்கு சொகுசு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் ரிஷப்பண்ட் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் உடல் நலம் குணமடைந்து வருவது குறித்து ரிஷப் பண்ட் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் ஒரு படி முன்னே... ஒரு படி வலிமையாக...ஒரு படி மேன்மையாக...என தெரிவித்துள்ளார்.ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய ரசிகர்கள் அந்த பதிவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story